கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி காஞ்சிபுரம் அரசுகாத்தம்மன் கோவிலில் உள்ள ஐயப்பன் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. ஐயப்பன் சிலைக்கு 108 மூலிகை பொருட்கள், 9 வகை பழச்சாறு, 18 வகை பழங்கள், 108 லிட்டர் பால், 18 லிட்டர் நெய் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. இதனையடுத்து சுமார் 500 பேருக்கு சமபந்தி விருந்து பரிமாறப்பட்டது.