மகா பிரளய காலத்தில் பின் முதல் முதலில் உலகில் உயிர்கள் தோன்றிய ஸ்தலமாக போற்றப்படுதும் உலக புகழ் பெற்ற மகாமகம் திருவிழா நடைபெறுவதற்கு காரணமான முதன்மையான ஸ்தலமாகவும் விளங்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோவில் கும்பகோணம் அருள்மிகு மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவில் இந்தக் கோவிலில் கடந்த 2009ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் கடந்த 2023-ம் கும்பாபிஷேக திருப்பணிகள் ரூபாய் 15 கோடி மதிப்பில் தொடங்கி, 2 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் நிறைவுற்றதை அடுத்தும், வரும் 2028-ல் மகாமக விழா நடைபெறவுள்ளதை அடுத்து 16 ஆண்டுகளுக்குப் பின் கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தினமும் மண்டல அபிஷேகம் நடைபெற்று வந்தது அதன் நிறைவாக நேற்றைய தினம் முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றது. இன்று இரண்டாம் கால யாக பூஜைகள் நிறைவுற்றது அடுத்து மகாபூர்ணாஹூதி செய்யப்பட்டு புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து கொண்டு மங்கள வாத்தியங்களை இசைக்க திருக்கோவிலின் பிரகாரங்களில் வலம் வந்து மூலவர்களுக்கு தடங்கலில் இருந்த புனித நீரை கொண்டு மகா அபிஷேகம் செய்து மகாதீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .இதையும் படியுங்கள் : மதுரை மீனாட்சி ஆலயத்தில் கொடியேற்ற உற்சவம்