விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில், தை மாத பவுர்ணமியை ஒட்டி நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜையில் பெண்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மன் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து, மாலையில் பம்பை மேளதாளம் முழங்க, உற்சவம் அம்மனுக்கு 108 திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.