பரமக்குடியில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சார்பு ஆய்வாளர் குடும்பத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் ஆறுதல் தெரிவித்தார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை சார்பு ஆய்வாளரின் குடும்பத்தாரிடம் வழங்கினார்.