கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை பகுதியில் எஸ்.பி ஆலோசனையின் பெயரில் வைத்த சிசிடிவி கேமரா மூலம் வீட்டில் திருட வந்த கொலை குற்றவாளி வசமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பூரண்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரோஜினி என்பவரது வீட்டிற்கு திருட வந்த மர்ம நபரை, அவரது உறவினர்கள் தேடி பிடித்து, சிசிடிவி காட்சியை பார்த்து உறுதி செய்து போலீசில் ஒப்படைத்தனர்.