கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மதுக்கர் சவுத்ரி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரிவான விசாரணை முடிந்தபிறகே விபத்துக்கான காரணம் தெரியவரும் என்றும், கவாச் தொழில்நுட்பத்திற்கும் இந்த விபத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.