சென்னை வேளச்சேரி , பெருங்குடி பறக்கும் ரயில் நிலையத்தை இணைக்கும் சாலைகளில் உள்ள நீர்வழிப்பாதைகளை சீரமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. உள்வட்ட சாலை பராமரிப்பு பணியை தங்களுக்கு வழங்க மாநகராட்சி பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்தது.