தென்னிந்திய அளவிலான ரோல்பால் போட்டியில் முதலிடம் பிடித்து தங்க பதக்கத்தை வென்ற தமிழக அணிக்கு திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. முன்னதாக ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல்பால் அசோசியேசன் சார்பில் 11 வயதுக்குட்பட்ட இருபாலர்களுக்கான 5 வது தென்னிந்திய ரோல்பால் போட்டிகள் பெரம்பலூரில் கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, அந்தமான், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா 6 மாநில அணிகள் கலந்து கொண்டன.