தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே செளந்தரநாயகி உடனுறை பிரம்ம ஞானபுரீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற இஸ்லாமியர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது. யாகசாலையில் இருந்து மேள, தாளங்களுடன் கொண்டுவரப்பட்ட புனிதநீர் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.