சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அருள்மிகு சோரகை மலை ஸ்ரீ வேட்ராய பெருமாள் திருக்கோவில் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட 2 தெப்பத்தில் ஸ்ரீ வேட்ராயப் பெருமாளும், பாமா- ருக்மணி தேவியர்களுடன் கிருஷ்ணனும் எழுந்தருளி திருக்குளத்தில் வலம் வந்தனர். அதில் ஏராளமான பக்தர்கள் கண்டு சுவாமிகளை தரிசனம் செய்தனர்.