சென்னையில் விண்ணை முட்டியது ஆபரணத் தங்கத்தின் விலையேற்றம், விரைவில் ஒரு லட்சத்தை தொட்டு விடும் என்று கூறப்படுகிறது. சென்னையில் இன்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரே நாளில் 2,400 ரூபாய் உயர்ந்து 97,600 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது, ஒரு சவரன் தங்கம் ரூ.97,600 (+ரூ.2,400) ஒரு கிராம் தங்கம் 12,000 ரூபாயை கடந்து இதுவரை வரலாறு கண்டிராத உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராமுக்கு 300 ரூபாய் உயர்ந்து 12,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.ஒரு கிராம் தங்கம் ரூ.12,200(+ரூ.300)ஓரிரண்டு நாட்களில் ஒரு லட்சம் ரூபாயை ஒரு சவரன் தங்கம் எட்டும் எனத் தகவல் கூறப்படுகிறது. வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடுவோர், நடுத்தர வர்க்கத்தினர் செய்வதறியாது விழி பிதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.