சென்னை அடுத்த மதுரவாயலில் தந்தையிடம் பைக் கேட்டு தகராறில் ஈடுபட்ட மகன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்வதாக மிரட்டிய போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த தீ பரவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த முருகன் என்பவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வரும் நிலையில், அவருடைய மகன் ஜீவா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.