தமிழகத்தில் சமூக நீதி அரசியலை நீர்த்து போக செய்யும் வேலையில் சிலர் இறங்கி இருப்பதாக, சீமானை திருமாவளவன் மறைமுகமாக விமர்சித்தார். சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை கையில் விலங்கிட்டு நாடு கடத்தி வரும் அமெரிக்காவை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், பெரியார் பிம்பத்தை சிலர் சிதைத்து, சிதறடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சாடினார்.