சிலர் வேலை வெட்டி இல்லாமல் போகிற போக்கில் கருத்து சொல்கின்றனர் என்றும், இருப்பை காட்டிக் கொள்வதற்காக அவதூறு பரப்புவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள் இது போன்று பேசத்தான் செய்வார்கள் என சாடினார்.