மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஒரு நாள் இரவு பெய்த கனமழைக்கே தேனி மாவட்டம் போடி மெட்டு மலைச்சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக எட்டாவது கொண்டை ஊசி வலையில் உள்ள புலியூத்து அருவியில் சுமார் ஆறு மாதங்கள் கழித்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.