தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்தில் கடல் சீற்றத்தால், தார் சாலை மணல் திட்டாக மாறியுள்ளது. கடந்த சில நாட்களாக கடல் சீற்றமாக காணப்படும் நிலையில், மண் அரிப்பு ஏற்பட்டு பனை மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும், பல பனைமரங்கள் விழும் நிலைமையில் உள்ள நிலையில், கடலருகே செல்லும் சாலையில், மணல் நிரம்பி திட்டாக காணப்படுகின்றன.