கும்பகோணத்தில் பாஜக பிரமுகரை வெட்டிய புகாரில் கைது செய்யப்பட்ட 8 பேரில் 3 பேருக்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து மாவு கட்டு போடப்பட்டுள்ளது. கடை விற்பனை தொடர்பாக கட்டப்பஞ்சாயத்து செய்வதில் சிலம்பரசன் மற்றும் பாஜக பிரமுகர் சரண்ராஜ் இடையே முன்பகை இருந்து வந்த நிலையில் கடந்த 7ம் தேதி சரண்ராஜை 6 பேர் கொண்ட கும்பல், சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் படுகாயம் அடைந்த சரண்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முக்கிய குற்றவாளியான சிலம்பரசன் தலைமறைவாக உள்ள நிலையில் போலீசார் இதுவரை 8 பேரை கைது செய்துள்ளனர். போலீசார் பிடிக்க சென்றபோது ஓட முயன்றதில், வாய்க்காலில் வழுக்கி விழுந்து இருவருக்கு காலில் எலும்பு முறிவும், ஒருவருக்கு கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டது.