சென்னையில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக காற்று மாசு அதிகரித்துள்ளது.காற்றின் தரக் குறியீடு 39-லிருந்து 142-ஆக உயர்ந்து மிதமான பாதிப்பு என்ற அளவில் பதிவாகியிருப்பதால், ஆஸ்துமா நோயாளிகள், இதய நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.