வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்திநகர் பகுதியில் அரசு கல்லூரி எதிரே உள்ள நிழற்கூடையில் கண்ணாடி விரியன் பாம்பு புகுந்ததால் பதற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.