தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு வழங்குவதற்காக, சுமார் நான்கு லட்சம் ஸ்நாக்ஸ் பொட்டலங்கள் தயார் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் மாநாட்டில் உள்ளே நுழைந்தவுடன் தொண்டர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட் மற்றும் மிக்சர் பாக்கெட்டுகள் அடங்கிய ஸ்நாக்ஸ் பொட்டலங்கள் வழங்கப்பட உள்ளது. இதற்கான பேக்கிங் பணியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர்.