கர்நாடக மாநிலத்திலிருந்து, இரு சக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 1330 மது பாக்கெட் மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தமிழக, ஆந்திர எல்லைப் பகுதி வழியாக கர்நாடக மது பாக்கெட் கடத்தி வருவதாக பேரணாம்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 1330 கர்நாடக மது பாக்கெட் இருப்பது தெரிய வந்தது. பேரணாம்பட்டு ஜேஜே நகர் பகுதியை சேர்ந்த பூவரசன், கோட்டச்சேரி பகுதியை சேர்ந்த புவியரசன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், 1330 கர்நாடக மது பாக்கெட் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.