திருச்சி விமான நிலையத்திற்கு மோதிரம் மற்றும் கம்பி வடிவில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 64 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி விமானம் நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொண்டதாக 3 பேரை அழைத்து சோதனை செய்த அதிகாரிகள், அவர்களிடம் மோதிரம் மற்றும் கம்பி வடிவிலான 898 கிராம் எடை கொண்ட தங்கம் இருந்ததை கண்டறிந்தனர்.இதனால் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.