துபாய் மற்றும் மலேசியா நாடுகளில் இருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்திக் கொண்டு வரப்பட்ட 6 கிலோ தங்கம் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. கோலாம்பூரில் இருந்து வந்த விமானத்தில் சென்னை வந்த இருவரின் சூட்கேஸ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் மறைத்து வைத்திருந்த 3 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். இதே போல் துபாயிலிருந்து வந்த இரு பயணிகளிடம் இருந்தும் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக 4 கோடியே 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட நால்வரும் சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.