மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட சாராய பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸார், இருவரை கைது செய்தனர். வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸார், அந்த வழியாக பைக்கில் வந்த இருவரை பிடித்து சோதனை செய்தபோது, சாக்கு மூட்டையில் 100க்கும் மேற்பட்ட குவாட்டர் பாட்டில்களில் சாராயம் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.