சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களை முறையாக கவனத்தில் கொள்ளாமல் நீதிமன்றம் விடுதலை செய்ததாகவும், அதனை ரத்து செய்ய கோரியும், சித்ராவின் தந்தை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.