சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 920 ரூபாய் சரிந்தது.பிப்.26 விலை நிலவரம் ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்தது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 14 ஆயிரத்து 920 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 19 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. பிப்.27 விலை நிலவரம் ஒரு சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,200க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,900க்கு விற்பனை செய்யப்பட்டது.பிப்.28 தங்கம், வெள்ளி நிலவரம் (காலை)மாத மற்றும் வார இறுதி நாளான பிப்ரவரி 28ஆம் தேதி, சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 2,400 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 21,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 300 ரூபாய் விலை அதிகரித்து, மீண்டும் 15,000 ரூபாயைத் தாண்டியது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது. பிப்.28 தங்கம், வெள்ளி நிலவரம் (பிற்பகல்)சென்னையில், ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டு முறை உயர்ந்தது. ஒரு சவரனுக்கு 5,200 ரூபாய் விலை அதிகரித்தது. காலையில் சவரனுக்கு 2,400 ரூபாய் அதிகரித்த நிலையில் பிற்பகலில் 2,800 ரூபாய் உயர்ந்தது. ஒரே நாளில் 5,200 ரூபாய் அதிரித்ததால் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 24,400 ரூபாய்க்கு சென்றது.ஒரு கிராம் தங்கம் 15,550 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையும் ஒரே நாளில் இரண்டு முறை அதிகரித்தது. காலையில் 5 ரூபாய் அதிகரித்த நிலையில், பிற்பகலில் 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. மார்ச் 01 தங்கம் வெள்ளி விலை சென்னையில், மார்ச் 1ஆம் தேதி ஞாயிறன்றும், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,800 ரூபாய் உயர்ந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 26,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் ஒரு கிராமுக்கு 225 விலை உயர்ந்து, ஒரு கிராம் 15,775 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 325 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோவுக்கு 5,000 ரூபாய் உயர்ந்து 3 லட்சத்து 25,000 ரூபாயாக இருந்தது. போர்... விலை உயர்வு ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகள் அதிரடித் தாக்குதலால் ஞாயிற்றுக்கிழமையிலும் தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்ததுமார்ச்-02 தங்கம், வெள்ளி விலை சென்னையில், ஒரு சவரன் 22 காரட் ஆபரண தங்கம், ரூ.920 குறைந்து, ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.115 குறைந்து ரூ.15,660க்கு விற்பனை ஆனது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலையில், வாரத்தின் முதல் நாளான மார்ச் 2ஆம் தேதி, லேசான சரிவை கண்டது. தங்கத்தின் விலையை தொடர்ந்து வெள்ளியின் விலையும் சரிந்தது. ஒரு கிராம் வெள்ளி 10 ரூபாய் குறைந்து 315 ரூபாய்க்கும் ஒரு கிலோ 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது. ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்... 26.02.2025 - ரூ.1,19,36027.02.2028 - ரூ.1,19,20028.02.2026 - ரூ.1,21,600 (காலை)28.02.2026 - ரூ.1,24,400 (பிற்பகல்)01.03.2026 - ரூ.1,26,20002.03.2026 - ரூ.1,25,280 Related Link ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்