நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அரசு சார்பில் முறையாக அகற்றவில்லை என வேதனை தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் தன்னார்வலர்களுடன் சேர்ந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் முறையாக முழுவதும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.