கோவையில் நடைபெறும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா காவல்துறை அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியை தமிழ்நாடு போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். அதன் பின்னர், கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் செந்தில்குமார் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுடன் போலீஸ் டிஜிபி ஆலோசனை நடத்தினார். முன்னதாக காவல்துறை ஆணையரகத்திற்கு வருகை தந்த அவருக்கு, காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.