குடும்பத்திற்காக இரவு, பகலாக கஷ்டப்பட்டு உழைத்த கார் ஓட்டுநர். கணவர் சவாரிக்கு சென்ற நேரத்தில் ஆண் நண்பருடன் நெருங்கிப் பழகிய மனைவி. கணவருக்கு விஷயம் தெரிந்ததால் வீட்டில் களேபரம். அடுத்த சில தினங்களில் கார் ஓட்டுநர் மயானத்தின் அருகே நிர்வாணமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த பயங்கரம். கணவனுக்கு பக்காவாக ஸ்கெட்ச் போட்ட கொலைகார மனைவி சிக்கியது எப்படி.? நடந்தது என்ன?இரவு நேரம். மாமா கிருஷ்ணதாஸுக்கு ஃபோன் பண்ணிருக்காரு மச்சான் மகேஷ். அப்ப, கிருஷ்ணதாஸோட ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்ல இருந்துருக்கு. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான பேசுனோம், அதுக்குள்ள எப்படி ஸ்விட்ச் ஆஃப்னு யோசிச்ச மகேஷ், வேலை ஏதாச்சும் வந்துருக்கும், அதனால தான் ஸ்விட்ச் ஆஃப் பண்ணியிருப்பாருன்னு நினைச்சிட்டு, தூங்க போயிட்டாரு. ஆனா, மறுநாள் காலையில கிருஷ்ணதாஸுக்கு ஃபோன் பண்ணப்பவும் ஸ்விட்ச் ஆஃப்லே தான் இருந்துருக்கு. அதனால, சந்தேகமடைஞ்ச மகேஷ், திருவிடைக்கோடு சுடுகாடு பக்கத்துல உள்ள பாழடைந்த தகர கொட்டகைக்கு போய் பாத்தவரு கதி கலங்கி போய் நின்னுருக்காரு. ஏன்னா, அங்க கிருஷ்ணதாஸ் தலை, கை, கால்கள் வெட்டப்பட்டு, நிர்வாண நிலையில கொலை செய்யப்பட்டு சடலமா கெடந்துருக்காரு.என்ன பண்றது, ஏது பண்றதுன்னு தெரியாம மகேஷ், போலீஸுக்கு ஃபோன் பண்ணி இன்பார்ம் பண்ணியிருக்காரு. கொஞ்ச நேரத்துல அங்க வந்த போலீஸ்காரங்க கிருஷ்ணதாஸ் உடல மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வச்சிட்டு, சடலம் கிடந்த இடத்த சோதனை பண்ணாங்க. அப்ப, அந்த இடத்துல ஒரு செல்போனும், வாட்சும் சிக்கிருக்குது. 100 மீட்டர் தூரத்துல பைக்கு ஒன்னு அடிச்சு நொறுங்குன நிலையில கிடந்துருக்கு. இது எல்லாத்தையும் கவனிச்ச காவலர்கள், தீவிர புலன் விசாரணையில இறங்குனாங்க. அதுலதான், கிருஷ்ணதாஸ யாரு இப்படி பண்ணது.? இந்த கொலைக்கு மோட்டிவ் என்னன்னு ஒவ்வொண்ணா தோண்டி துருவி விசாரணை பண்ணதுல, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துச்சு.கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி பக்கத்துல பிரம்மபுரம் அப்டிங்குற கிராமம் இருக்கு. அந்த கிராமத்த சேர்ந்த 33 வயசான பவித்ராவும், 36 வயசான கிருஷ்ணதாஸும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. கல்யாணமாகி 13 வருஷமாகியும் இந்த தம்பதிக்கு குழந்தை பிறக்காததால், அடிக்கடி கணவன் - மனைவிக்கு இடையில சண்ட வர ஆரம்பிச்சிருக்குது. குழந்தை இல்லாதத நினைச்சு கிருஷ்ணதாஸ் மது பழக்கத்துக்கு அடிமையாகிட்டாரு. இப்படியே கிருஷ்ணதாஸூம், பவித்ராவும் மாறி மாறி சண்ட போட்டுட்டே இருந்துருக்காங்க. பவித்ராவோட அம்மா வீடும், கிருஷ்ணதாஸோட வீடும் பக்கத்து பக்கத்துலே தான். அதனால, பவித்ரா பாதி நேரம் அவங்க அம்மா வீட்டுலதான் இருப்பாங்களாம். பவித்ராவுக்கு மகேஷ்ங்கிற பேருல ஒரு தம்பி இருக்காருமகேஷ பாக்குறதுக்காக அவரோட ஃபிரண்ட் ரமேஷ், அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டு போயிருக்காரு. ரமேஷ் வீட்டுல உள்ளவங்கக்கிட்ட அன்பா பேசுனத பாத்ததும், பவித்ராவுக்கு அவரு மேல ஒரு ஈர்ப்பு வந்திருக்குது. தம்பியோட ஃபிரண்டும் நமக்கு தம்பின்னு நினைக்காம பவித்ராவோட புத்தி திசை மாறி போயிருக்குது. ஒருநாள் ரமேஷ், மகேஷ பாக்க வீட்டுக்கு வந்திருக்காரு. அப்போ, ரமேஷ்கிட்ட இருந்து செல்போன் நம்பர வாங்குன பவித்ரா அன்னைக்கி நைட்டே வாட்ஸ் ஆப்ல மெசேஜ் பண்ணி பேசியிருக்காங்க. தெனமும் மெசேஜ்ல பேசிட்டு இருந்த ரமேஷும், பவித்ராவும் செல்போன்ல மணிக்கணக்குல பேச ஆரம்பிச்சிருக்காங்க. அப்பதான், பவித்ரா மேல ரமேஷுக்கு லவ் வந்து ரெண்டு பேரும் அடிக்கடி தனிமையில சந்திச்சிருக்காங்க.டிரைவர் வேலை பாத்துட்டு இருந்த கிருஷ்ணதாஸ், கடந்த 26ம் தேதி சவாரிக்கு கிளம்பி போய்ட்டாரு. அப்போ, வழக்கம்போல ரமேஷ வீட்டுக்கு வரவச்சு பவித்ரா தனிமையில இருந்தப்ப, திடீர்னு கிருஷ்ணதாஸ் வீட்டுக்கு வந்திருக்காரு. பெட்ரூம்குள்ள அரை குறை ஆடையோட மனைவி பவித்ராவும், ரமேஷும் தனியா இருந்தத பாத்து அதிரச்சியடைந்த கிருஷ்ணதாஸ், கத்தி சண்ட போட்டு மனைவிய அடிக்க பாஞ்சிருக்காரு. அந்த கேப்ல ரமேஷ் அங்க இருந்து எஸ்கேப் ஆகிட்டான். மகள் வீட்டுல சண்ட நடக்குறத பாத்து ஓடிவந்த மாமியார் முத்துலட்சுமி மருமகன் கிருஷ்ணதாஸ தடுத்திருக்காங்க. ஆனா, கொலைவெறில இருந்த கிருஷ்ணதாஸ் மாமியாரையும் சரமாரியா அடிச்சிருக்காரு. நீ ரொம்ப நேரம் ஃபோன் பேசும்போதே என்ன ஏதுன்னு விசாரிச்சிருக்கனும், அப்படியே விட்டது என் தப்புதான், காதலிச்சு கல்யாணம் பண்ண எனக்கே துரோகம் பண்ணிட்டியான்னு கேட்டு கொந்தளிச்ச கிருஷ்ணதாஸ், மனைவி பவித்ராவோட செல்போனையும் சிம் கார்டையும் சுக்கு நூறா உடைச்சிட்டாரு.சம்பவம் நடந்த ரெண்டு நாளைக்கு அப்புறம், தாய் முத்துலட்சுமியோட கடைக்கு போய் புது சிம் கார்டு வாங்குன பவித்ரா, ரமேஷுக்கு ஃபோன் பண்ணி பேசியிருக்காங்க. நம்ம விஷயம் தெரிஞ்சதுல இருந்து தெனமும் அவன் என்ன அடிச்சு சித்ரவதை பண்ணிட்டு இருக்கான். என்ன எங்கேயாவது கூப்பிட்டு போய்டுன்னு ரமேஷ்கிட்ட சொல்லியிருக்காங்க பவித்ரா. மகள் பண்றது தப்புன்னு சொல்லி கண்டிக்க வேண்டிய தாய் முத்துலட்சுமியும் மகள் செய்யுற தப்புக்கு பக்க பலமா இருந்தது தான் கொடூரத்தோட உச்சமே. ரமேஷ்கிட்ட ஃபோன்ல பேசுன முத்துலட்சுமி, அவன் என் மகள டார்ச்சர் பண்றான் பா, அவனுக்கு ஒரு முடிவு கட்டிட்டா, நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கலாம், யாரும் தடையா இருக்க மாட்டாங்கன்னு சொல்லியிருக்காங்க. அதுமட்டுமில்லாம, பவித்ரா, முத்துலட்சுமி, ரமேஷ் மூணு பேரும் சேர்ந்து கிருஷ்ணதாஸோட கதைய முடிக்க பிளான் போட்டுருக்காங்க. சம்பவத்தன்று, காலையில கிருஷ்ணதாஸ் வேலைக்கு கிளம்பிட்டாரு. எங்க போனாலும் மனைவி பவித்ரா கிட்ட சொல்லிட்டுதான் போவாராம் கிருஷ்ணதாஸ். ஆனா, மனைவியோட கள்ளக்காதல் விவகாரம் தெரிஞ்சதும் அவகிட்ட பேசுறதும் இல்ல. வெளியே போனாலும் சொல்லாமதான் போயிருக்காரு. அதனால, பவித்ராவுக்கு, கிருஷ்ணதாஸோட கதைய முடிக்குறதுல கொஞ்ச சிரமம் ஏற்பட்டிருக்கு. கிருஷ்ணதாஸ் எங்க இருக்காருன்னு தெரிஞ்சா அவரோட கதைய நைட்டோட நைட்டா முடிச்சிடலாம் அப்டிங்குறதுதான் அந்த கும்பலோட பிளானே. ஆனா, கிருஷ்ணதாஸ் எங்க இருக்காருன்னு தெரியல. அதனால, தம்பி மகேஷுக்கு போன் பண்ண பவித்ரா, மாமா இன்னும் வீட்டுக்கு வரல எங்க இருக்காருன்னு கேட்டு சொல்லு, நான் ஃபோன் பண்ணா எடுக்க மாட்டாருன்னு சொல்ல, மகேஷும், கிருஷ்ணதாஸுக்கு ஃபோன் பண்ணிருக்காரு. அப்ப, வழக்கம்போல, தகர கொட்டகைல மது குடிச்சிட்டு இருக்கேன், கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு போய்டுவேன்னு சொல்லிட்டு வச்சிட்டாரு. இந்த விஷயத்த, மகேஷ் தன்னோட அக்கா பவித்ராகிட்ட சொல்லியிருக்காரு. மகேஷுக்கு பவித்ராவோட திட்டம் எதுவும் தெரியாது. தம்பி சொன்னத கேட்டதும் பவித்ரா, கிருஷ்ணதாஸ் இருக்குற இடத்த ரமேஷ்கிட்ட சொல்ல, ரமேஷ் தன்னோட ஃபிரண்ட் விமல கூப்பிட்டுக்கிட்டு அங்க போய் மதுபோதையில இருந்த கிருஷ்ணதாஸ்கிட்ட வாக்குவாதம் பண்ணியிருக்கான். அதுமட்டுமில்லாம, கிருஷ்ணதாஸ் ட்ரெஸ் கழட்டி நிர்வாணப்படுத்தி தலை, கை, கால்னு நிதானமா வெட்டி, துடிக்க துடிக்க கொன்னுருக்காங்க. அதுக்கப்புறம், பவித்ராவுக்கு ஃபோன் பண்ணி அவன் கதைய முடிச்சிட்டோம் நாங்க ரெண்டு பேரும் கேரளாவுக்கு கிளம்புறோம் சொல்லிட்டு அங்க இருந்து எஸ்கேப் ஆகிட்டான் ரமேஷ். கிருஷ்ணதாஸ் கொலை வழக்கு சம்பந்தமா யார் மேலயாவும் சந்தேகம் இருக்கான்னு போலீஸ் பவித்ராகிட்ட விசாரிச்சாங்க. அப்ப, போலீஸோட விசாரணைய பாத்து பயந்துப்போன பவித்ரா நடந்த எல்லாத்தையும் ஒன்னுவிடாம சொல்லியிருக்காங்க. அதுக்கப்புறம், கணவன கொலை செய்ய திட்டம்போட்ட பவித்ரா, முத்துலட்சுமி கேரளாவுல பதுங்கியிருந்த ரமேஷ், விமலுன்னு மொத்தம் நாலு பேரையும் அரெஸ்ட் பண்ணி கோர்ட்டுல ஆஜர்படுத்தி சிறையில அடைச்சிட்டாங்க. இதையும் பாருங்கள் - சலூன் கடையில் வடிந்த ரத்தக்கறை, ஆத்திரத்தால் நடந்த பயங்கரம்! | Saloon Shopowner | Crime