செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கிய ஆறு கோயில்களில், ஒரு கோயிலின் தடயங்கள் கிடைத்துள்ளது. 7 ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்ட ஏழு கோயில்களில் ஆறு கோயில்கள் கடலில் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நவீன கருவி மூலம் கடல் ஆராய்ச்சியில் தனது குழுவினருடன் ஈடுபட்ட இந்திய தொல்லியல் துறை கூடுதல் இயக்குநர் அப்ரஜிதா சர்மா, ஒரு கோயிலின் தடயங்களையும், பாசி பிடித்த கருங்கல் கட்டுமானங்களையும் துல்லியமாக கண்டறிந்ததாக தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : மீனவர்கள் தொடர் கைதை கண்டித்து போராட்டம் கடலுக்கு செல்லாமல் 7 வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்..!