தேனி அருகே அனுமதியின்றி கல்குவாரியில் கற்களை வெட்டி எடுத்ததாக, பெண் நில உரிமையாளர் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். ஏ.வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த லதா, தமக்கு சொந்தமான நிலத்தில் அரசு அனுமதியில்லாமல் கருங்கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், லதா உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். பாறைகளை தகர்ப்பதற்காக பயன்படுத்தப்பட்ட 15 கிலோ வெடிப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன