ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த காவேரிப்பாக்கம் பகுதியில் விவசாயி வீட்டில் இருந்து நகையை திருடியதாக 6 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 8 சவரன் நகை மற்றும் 700 கிராம் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர். தணிகைபோளூரை சேர்ந்த சக்திவேல், குமார், கார்த்தி, பாபு, குமார், முருகேசன் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.