கள்ளக்குறிச்சியில், நான்கு பேரை ஏமாற்றி, திருமணம் செய்துவிட்டு ஐந்தாவதாக திருமணம் செய்துகொண்ட கணவருக்கு, கம்பிநீட்டிய கல்யாண மோசடி ராணி, பிஞ்சுக்குழந்தைகளை தவிக்கவிட்டு 6ஆவது திருமணத்திற்காக வீட்டைவிட்டு வெளியேறியதாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது. பணத்திற்காகவும் சொகுசு வாழ்க்கைக்காவும் மோசடி பெண் நடத்திய திருமண நாடகங்களை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.”மருதமலை” திரைப்படத்தில் வரும் வடிவேலு நகைச்சுவை காட்சியை ரி-கிரியேட் செய்ய முடியுமென்றால், அது மதுரை டி.குன்னத்தூரை சேர்ந்த காளீஸ்வரி என்ற கல்யாண ராணியால் தான் முடியும் என்கின்றனர் அவரது லீலைகளை அறிந்தவர்கள்.சொகுசு வாழ்க்கைக்காக சீசனுக்கு சீசன் கணவரை மாற்றும் இந்த பெண்ணால், இரண்டு பிஞ்சுக்குழந்தைகள் தாய்ப்பாசத்துக்காக ஏங்கும் பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளன.கள்ளக்குறிச்சி மாவட்டம், மூரார்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், டிக்டாக்கில் டூயட் பாடி நடித்து வீடியோ போஸ்ட் செய்த போது பழக்கமானவர் தான் மதுரை டி.குன்னத்தூரை சேர்ந்த காளீஸ்வரி என்கிற பிரியா. கணவரை இழந்து கைக்குழந்தையுடன் தவிப்பதாக கூறி, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட காளீஸ்வரி, மெல்ல மெல்ல சிவக்குமாரின் காதல் அணுக்களை தூண்டி தன்வசப்படுத்தியுள்ளார். ஒருவழியாக சிவக்குமாரை தன்வலையில் வீழ்த்தி திருமணம் செய்துகொண்ட காளீஸ்வரி, ஒரு ஆண்குழந்தையையும் அதற்கடுத்த 2 ஆண்டுகளில் ஒரு பெண்குழந்தையையும் பெற்றெடுத்தார்.இந்நிலையில், திடீரென கடந்த ஓராண்டிற்கு முன், காளீஸ்வரி வீட்டை விட்டு வெளியேறி மாயமானதால் செய்வதறியாது குழந்தைகளை தூக்கிக் கொண்டு, மாமியார் வீட்டுக்கு சென்று சிவக்குமார் முறையிட்டுள்ளார். அங்கு சென்ற பின் தான் காளீஸ்வரியின் சுயரூபமே அவருக்கு தெரிய வந்திருக்கிறது. தன் மகளுக்கு ஏற்கனவே 4 திருமணங்கள் முடிந்து விட்டதாகவும் அவர்களை கழட்டிவிட்டுத் தான் உங்களை ஐந்தாவதாக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறி அதிர வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, திருமணம் செய்தவர்களில் இருவரை காளீஸ்வரி கொலை செய்து விட்டதாகவும் கூறி பகீர் கிளப்பியதாக சொல்லப்படுகிறது. இதையறிந்து உடைந்து போன சிவக்குமார், தன் குழந்தைகளுக்கு தாய் வேண்டும் என காளீஸ்வரியை தேடி அலைந்துள்ளார்.போலீசில் புகார் கொடுத்த சிவக்குமார் தொடர்ந்து காளீஸ்வரியை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஒருமுறை போனை எடுத்த காளீஸ்வரி, கொடுத்த புகாரை வாபஸ் பெறுமாறும் யாராலும் தன்னை எதுவும் செய்யமுடியாது என்றும் கூறி போலீசையே வசைபாடியிருக்கிறார். வேறு வழியே இல்லாமல் விழிபிதுங்கி நின்ற சிவக்குமார், கையில் கத்தி, மருந்து உள்ளிட்டவற்றை வைத்துக் கொண்டு குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள உள்ளதாகவும் நீ வந்தால் உன்னை மன்னித்து ஏற்றுக் கொள்வதாகவும் கூறி வீடியோ எடுத்து காளீஸ்வரிக்கு அனுப்பியுள்ளார். ஆனால், இந்த வீடியோவை பார்த்தும் காளீஸ்வரி மனமிரங்கவில்லை.வீட்டிலிருந்த நகைகள் மட்டுமல்லாது 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கி கொண்டும் காளீஸ்வரி வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக வேதனை தெரிவிக்கும் சிவக்குமார், தன் குழந்தைகளுக்கு அம்மா வேண்டும் என்பதால் தான் போலீஸ் ஸ்டேஷனுக்கும் எஸ்.பி. ஆபிசுக்கும் நடையாய் நடப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.இப்போதும் கூட காளீஸ்வரி 6ஆவதாக ஒருவரை திருமணம் செய்து கொள்ள தான் ஓடி விட்டதாகவும், தன் மனைவியின் ஒவ்வொரு கணவரின் புகைப்படங்களையும் கையில் வைத்துக் கொண்டு பரிதாப நிலையில் நின்று கொண்டிருந்தார். காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்காமல் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும், மனைவி காளீஸ்வரியும் குழந்தைகளை கொன்று விடு என்று கூறுவதாகவும் விரக்தி தெரிவிக்கிறார்.அற்ப சுகத்துக்காகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும் அப்பாவி இளைஞர்களை குறிவைத்து மோசடி செய்துவரும் காளீஸ்வரியை விரைந்து கைது செய்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதையும் பாருங்கள் -IN Sign in Nigazh Thagavu | "உனக்காக தான் அவள கொன்னேன்" "ஒரே குடும்பம்.. 3 பேர்.." நடுங்கவிட்ட கொ*ல | CrimeNews