விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் உணவு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த உணவுத் திருவிழாவில் பானையில் சமைக்கப்பட்ட பாரம்பரிய உணவு முதல் துரித உணவுகள் வரை அனைத்தும் பரிமாறப்பட்டது. இதில் திரளான பொது மக்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு உணவுகளை ருசி பார்த்தனர்.