காஞ்சிபுரத்தில், பாமக பகுதி கழக செயலாளர் பூபாலன் என்பவரை சிவகாஞ்சி காவல்நிலைய தலைமை காவலர் சரவணன் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக பாமகவினர் காவல் நிலையம் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் உறுதியளித்ததால் பாமகவினர் கலைந்து சென்றனர்.