சிவகங்கை மாவட்டம் செண்பகம்பேட்டை பகுதியில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் லெம்பலக்குடி சுங்கச்சாவடியில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் விதிகளுக்கு முரணாக, செண்பகம்பேட்டை பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் ஏதேனும் ஒன்றை அகற்றக்கோரியும் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. 60 கிலோ மீட்டர் இடைவெளியில் சுங்கச்சாவடிகள் இருக்க வேண்டும் என்ற விதிகளுக்கு மாறாக, இவ்விரு சுங்கச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருப்பதால், செண்பகம்பேட்டை பகுதியில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.