சிவகங்கையில் சொத்துவரிக்கு பெயர் மாற்றம் செய்ய 9 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நகராட்சி பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். பாலமுருகன் என்ற அந்த பில் கலெக்டர், சிவகங்கையை சேர்ந்த கணேசன் என்பவரிடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கணேசனிடம் 9 ஆயிரத்தை முன்பணமாக வாங்கியபோது பாலமுருகனை போலீசார் கைது செய்துள்ளனர்.