சீத்தாராம் யெச்சூரி நினைவு தினத்தை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் உட்பட 75 பேர் உடல் மற்றும் கண் தானம் செய்தனர். இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற உடல் மற்றும் கண் தான நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சச்சிதானந்தம் உட்பட 75 பேர் உடல் மற்றும் கண் தானம் செய்தனர். உடல் உறுப்பு தானம் செய்த அனைவருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் கேடயங்களை வழங்கினார். சீத்தாராம் யெச்சூரி தனது உடலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.