திருவள்ளூர்... ரத்தம் படிந்த சட்டையுடன் சாலையில் தலைதெறிக்க ஓடிய இளைஞர். நடுவீட்டில் சடலமாக கிடந்த பெண். கிராம மக்கள் மூலம் கொலையாளியை அடையாளம் கண்ட போலீஸ். செல்போன் நம்பரை ட்ரேஸ் செய்து இளைஞரை தட்டித் தூக்கிய போலீஸ். இளம்பெண் கொலை செய்யப்பட்டது ஏன்? பின்னணி என்ன?நைட்டு நேரம், இருளஞ்சேரி கிராம மக்கள் எல்லாரும் தங்களோட வீட்டு வாசல்ல உட்காந்து பேசிட்டு இருந்துருக்காங்க. அப்ப திடீர்ன்னு அந்த வழியா இசைமேகம்ங்குற இளைஞர் ரத்தம் படிஞ்ச சட்டையோட ஓடிருக்காரு. இதபாத்த கிராம மக்கள் எதுக்கு இவன் இந்த நேரத்துல இப்படி ஓடுறான்னு, நினைச்சு இசைமேகத்தோட வீட்டுக்கு ஓடிப் போய் பாத்துருக்காங்க.அப்ப நடுவீட்ல அவரோட அண்ணி சாந்தி கழுத்தறுக்கப்பட்ட நிலையில ரத்த வெள்ளத்துல சடலமா கிடந்துருக்காங்க. இதபாத்து அதிர்ச்சியடைஞ்ச கிராம மக்கள் உடனே போலீஸ்க்கு ஃபோன் பண்ணி தகவல சொல்லிட்டாங்க.இதனால சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் சடலத்த மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. அடுத்து கிராம மக்கள் கிட்ட கொலையாளி பத்தி கேட்ருக்காங்க. அப்ப இசைமேகம் தான் ரத்தம் படிஞ்ச சட்டையோட ஓடுனான், ஆனா அவன் எங்க தப்பிச்சு போனான்னு எங்களுக்கு தெரியலன்னு சொல்லிட்டாங்க கிராம மக்கள்.இதனால இசைமேகத்தோட செல்போன் நம்பர ட்ரேஸ் பண்ணி போலீஸ் விசாரிக்க ஆரம்பிச்சாங்க. அதுபடி அதே கிராமத்துல உள்ள ஒரு வீட்ல பதுங்கியிருந்த இசைமேகத்த பிடிச்ச போலீஸ் அவருகிட்ட விசாரணையில இறங்குனாங்க. கடம்பத்தூர் இருளஞ்சேரி பகுதிய சேந்த இளையராஜா, ஒரு ப்ரைவேட் கம்பெனியில ஓட்டுநரா வேலை செஞ்சுட்டு இருக்காரு. இவருக்கு சாந்தி-ங்குற மனைவி இருக்காங்க. கல்யாணமான ஒரு வருஷம் வர்ற சாந்தி கர்ப்பம் தரிக்கலன்னு கூறப்படுது. இதனால அவங்க வீட்ல சாந்திய யாருமே மதிக்கல. சாந்திய சொந்தக்காரங்க எல்லாரும் கரிச்சுக் கொட்டிக்கிட்டே இருந்துருக்காங்க. அதுக்கப்புறம் இளையராஜாவோட தம்பி இசைமேகத்துக்கு, 4 மாசத்துக்கு முன்னாடி திருமணமாகிருக்கு.இதுக்கிடையில இசைமேகத்தோட மனைவி லாவண்யா உடனே கர்ப்பம் தரிச்சுருக்காங்க. இதனால சொந்தக்காரங்க எல்லாரும் இசைமேகத்தோட மனைவிய தலைமேல தூக்கி வச்சு கொண்டாடிருக்காங்க. அதுமட்டும் இல்லாம சாந்தி ஒரு வருஷமாகியும் கருத்தரிக்காம இருந்தா, ஆனா இவ கல்யாணமான கொஞ்சம் நாட்கள்லையே கருத்தரிச்சுட்டான்னு சொல்லி, இசைமேகத்தோட மனைவி மேல பாசம் காட்ட ஆரம்பிச்சுட்டாங்க. இதனால சாந்திக்கு அந்த வீட்ல சுத்தமா மரியாதையே இல்லை.அதுக்கப்புறம் சாந்திக்கும் இசைமேகத்தோட மனைவிக்கும் அடிக்கடி வீட்ல பிரச்னை ஏற்பட்டிருக்கு. சாந்தி தொட்டதுக்கொல்லாம் இசைமேகத்தோட மனைவி லாவண்யாவ தொடர்ந்து திட்டிக்கிட்டே இருந்துருக்காங்க. இதபத்தி லாவண்யா தன்னோட கணவன் இசைமேகத்துக்கிட்ட சொல்லிருக்காங்க. உங்க அண்ணி நான் சமையல் செஞ்சாலும் ஏதாவது குறை சொல்றாங்க, வீட்டு வேலை செஞ்சாலும் ஏதாவது குறைய கண்டுபிடிச்சு என்ன திட்டிக்கிட்டே இருக்காங்கன்னு அழுது புலம்பிருக்காங்க.மனைவி அழுதத பாத்து கோபமான இசைமேகம் தன்னோட அண்ணிகிட்ட இத பத்தி கேட்ருக்காரு. அதுமட்டும் இல்லாம சொந்தக்காரங்க எல்லாரும் லாவண்யாவுக்கு சப்போர்ட் பண்ணி சாந்திய திட்டிருக்காங்க. இதனால லாவண்யா மேல சாந்திக்கு இன்னும் கோபம் அதிகமாகிருக்கு.சம்பவத்தன்னைக்கு சாந்தி மறுபடியும் லாவண்யாவ ஜாடை மாடையா திட்டிருக்காங்க. இதகேட்டு கோபமான இசைமேகம் கிட்சன்ல இருந்த கத்திய எடுத்துட்டு வந்து சாந்திய கழுத்து, முகம், கைன்னு எல்லா இடங்களையும் சரமாரியா குத்திக் கிழிச்சுருக்காரு. இதுல நிலைகுலைஞ்ச சாந்தி சம்பவ இடத்துலையே சுருண்டு விழுந்து உயிரிழந்துட்டாங்க. விசாரணையோட முடிவுல எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ், இசைமேகத்த கைது பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க..