ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஒற்றை காட்டு யானை சாலையை மறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். வனத்தை விட்டு நேற்று இரவு சுமார் 7 மணியளவில் வெளியே வந்த ஒற்றை காட்டு யானை, கரும்பு லாரியை எதிர்பார்த்து சாலையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தது. இதனால், சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.