கோவை, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தானிக்கண்டி மலைவாழ் கிராமத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. இங்கு வாழும் மலைவாழ் மக்கள் வணங்கக்கூடிய அம்மன் கோயில் அருகே, நேற்று இரவு புகுந்த ஒற்றைக்காட்டு யானை, வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தது. உடனடியாக வந்த வனத்துறையினர் யானையை அங்கிருந்து விரட்ட பட்டாசு வெடித்தும் சத்தம் எழுப்பியும் முயற்சி செய்தனர். உள்ளே சிக்கிய யானை சிறிது நேரம் கழித்து ஒரு வழியாக வெளியே வந்தது. வெளியே வந்த யானையை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினரும் வேட்டை தடுப்பு வீரர்களும் பட்டாசு வெடித்தனர். சிறிது நேரம் அங்கும் இங்கும் போக்கு காட்டிய யானை, வனத்திற்குள் சென்றது.