கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவிலுக்கு வரும் ஒற்றை காட்டு யானையால் பக்தர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். பிப்ரவரி மாதம் முதல் மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஆங்காங்கே அன்னதான கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஒற்றைக் காட்டு யானை அடிக்கடி உணவு தேடி கோவிலில் உள்ள அன்னதான கூடத்திற்கு வந்து செல்கிறது.