நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நெலாக்கோட்டை பகுதியில் உலா வந்த ஒற்றைக் காட்டு யானை, இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், காட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.