நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் காட்டு யானை முகாமிட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். முள்ளூர் பகுதியில் வனப்பகுதிக்குள் இருந்து வெளியில் வந்த யானை தேயிலை தோட்டத்தில் சுற்று திரிந்து வருகிறது. இதனை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.