கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது பெற்ற பின்னணிப் பாடகி பி.சுசீலா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பாட்டுப் பாடி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து விருதை பெற்றுக் கொண்ட போது, கலைஞர் எழுதிய காகித ஓடம் பாடலை பி.சுசீலா பாடிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரசித்து கேட்டார். பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலையும் பி.சுசீலா பாடினார் கடைசியாக பேசிய பி.சுசீலா, தனக்கு விருது கொடுத்து பெருமைப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறியதோடு, கலைஞருடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.