சென்னை, கண்ணகி நகரில் அமைந்து வரும் சிந்தட்டிக் கபடி விளையாட்டு மைதானத்தை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கபடி வீராங்கனை கார்த்திகாவுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அப்பகுதி பெண்கள், மாணவிகள், துணை முதல்வருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். கபடி விளையாட்டில், தமிழ்நாட்டிற்கு தங்கம் வென்று, பெருமை சேர்த்த கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா, முதலமைச்சர், துணை முதல்வரிடம் சிந்தட்டிக் மைதானம் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில், சிந்தட்டிக் கபடி விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கண்ணகி நகர் கார்த்திகாவின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அமைந்து வரும் சிந்தட்டிக் கபடி மைதானம் அமைக்கும் பணியை கார்த்திகாவுடன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.இதையும் பாருங்கள் - கண்ணகி நகரில் சிந்தட்டிக் கபடி விளையாட்டு மைதானம் - துணை முதல்வர் உதயநிதி ஆய்வு