தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான மாநாடு வேலூரிலுள்ள டார்லிங் மஹாலில் நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் தலைவர் சகிலன் பத்மநாபன்,வேலூர் பொறியியல் கல்லூரி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் கேபிள் ஆபரேட்டர்களின் குடும்பங்களுக்கு திருமண உதவித்தொகை, மரணமடைந்த ஹலோ கேபிள் டிவி ஆபரேட்டர்களின் குடும்பங்களுக்கு ஈம சடங்கு உதவித்தொகை, மகளிருக்கு புடைவை ஆகியவற்றை நிறுவன தலைவர் சகிலன் பத்மநாபன் வழங்கினார்.