தஞ்சை மாவட்டம் சாலியமங்களம் பகுதியை சேர்ந்த 11- ஆம் வகுப்பு மாணவன் லெட்சுமி ராஜா, சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான சிலம்பம் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். தஞ்சையில் உள்ள ருத்ரன் சிலம்பாட்டம் பயிற்சி மையத்தில் பயின்று வந்த மாணவன் லட்சுமி ராஜா, தொடுமுனை சிலம்பம் போட்டியில் முதலிடம் பிடித்தார்.