கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ள தொழிற்சாலையை முற்றுகையிட்ட அப்பகுதியினர், அதனை மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் நச்சு புகையால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுதிணறல், வாந்தி, மயக்கம் மற்றும் கண்எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.