திருவள்ளூர் அருகே தேர்தல் முன் விரோதம் காரணமாக முன்னாள் வார்டு உறுப்பினர் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திரா நகர் பகுதியை சேர்ந்த முன்னாள் வார்டு உறுப்பினர் ஜெகதீசன், தனது வீட்டருகே நின்று கொண்டிருந்த போது, மர்ம நபர்களால் வெட்டப்பட்டார். விசாரணையில் கடந்த தேர்தலின் போது சரவணன் என்பவருக்கும் ஜெகதீஷன் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலே காரணம் என தெரியவந்தது.